-
பழையர் இன மக்கள் அவர்களின் மலை மற்றும் மழைத்தெய்வங்களை வழிபடும் முறை
ஆசிரியர் : முருகேஸ்வரி Read the translated story in English கோடைக்கானலில் உள்ள பாரதி அண்ணா நகர் என்ற கிராமத்தில் பழையர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வெயில் அதிகமாயுள்ள சித்திரை மாதத்தில் ஒரு நாள், அவர்கள் தங்களது மலைத்தெய்வமான பூத நாச்சியம்மனுக்கு விழா எடுத்துக்கொண்டாடுவர் – வேனல் காலத்தில், தண்ணீர் பற்றாக்குறையுமிருக்கும், அதே சமயம், அதிக உஷ்ணத்தினால் காட்டுத்தீயும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இவ்விரண்டாலும் தங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது எனக்கருதி ,இவ்விழா எடுப்பர். பூத நாச்சியம்மன் எனும் மலைத்தெய்வம்தான் தங்களைக்காப்பதாக பழையர்கள் நம்புகிறார்கள். இதைப்பற்றி மேற்கொண்டு தெரிந்துகொள்வதற்காக பூம்பாயி [எ] வசந்தி எனும் பழையர் பெண்மணியைக் கேட்டதற்கு, அவர் கூறுகிறார் : “ நிலம், ,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் தன்னுள் அடக்கியவள் என்பதையும், “ நாச்சி “ என்பது தெய்வத்தைக்குறிக்கும் என்பதாலும், எங்களுடைய வனங்களுக்கு தெய்வமானதாலும் “பூத நாச்சி அம்மன் “ என்று அழைக்கிறோம்; மற்றவர்களைப்போல் மூன்று அல்லது நான்கு நாட்கள் எல்லாம் நாங்கள்…